தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை; வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் செப்டம்பர் 30ம் தேதி இன்று வரை தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி,சேலம், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக பெய்துள்ளது. அதேவேளை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






