இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
Published on

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. ஆனாலும், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு , காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, நாகை ஆகிய 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com