இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

நெல்லை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
Published on

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாகக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, நாகை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தென்காசி கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com