28 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
28 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு
Published on

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பின் இது மேலும் வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 28 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com