சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னை
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது என்றும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் , லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர் , சென்டிரல், கிண்டி, ஆலந்தூர் , ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வடபழனி , தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது .
Related Tags :
Next Story






