தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 3 வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும்


தமிழகத்தில்  நாளை முதல் ஜூலை 3 வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும்
x

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2-3 நாட்கள் மாத இறுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஜூன் 26-ஜூலை 3 வரை போடிநாயக்கனூர், கொடைக்கானல், வாடிப்பட்டி,நத்தம், மதுரை, அழகர்கோவில்,மேலூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி, சிவகங்கை, உசிலம்பட்டி, காளையார்கோவில், காரைக்குடி, அறந்தாங்கி,அரிமளம், புதுக்கோட்டை சுற்று பகுதியில் பரவலாக மிதமான முதல் ஒரு சில இடங்களில் சற்றே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாமக்கல், பரமத்தி,கரூர், எடப்பாடி,காரமடை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், துறையூர், கெங்கவல்லி, அரியலூர், கும்பகோணம், அய்யம்பேட்டை, லால்குடி தொழுதூர், வேப்பூர், பெண்ணாடம்,சேத்தியாதோப்பு, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை,தியாகதுருகம், திருக்கோவிலூர்,மடப்பட்டு, திண்டிவனம், செஞ்சி, ஆற்காடு, வந்தவாசி, சேத்துப்பட்டு, சுற்று பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். இந்த இடங்களில் தினமும் மழை எதிர்பார்க்க வேண்டாம் 2-4 நாட்கள் பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 2-3 நாட்கள் மாத இறுதியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story