பாகிஸ்தானில் நடப்பாண்டில் 1.75 லட்சம் பேர் வேலை தேடி வெளிநாடுகளில் தஞ்சம்

வாழ்வாதாரம் தேடி பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு வெளியேறினர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. எனவே நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து வாழ்வாதாரம் தேடி லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு வெளியேறினர். அதன்படி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் சுமார் 1.75 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருடன் சவுதி அரேபியா முதல் இடம் வகிப்பதாக பாகிஸ்தானின் குடியேற்ற துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story






