இங்கிலாந்து: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் - அதிர்ச்சி சம்பவம்


இங்கிலாந்து: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் - அதிர்ச்சி சம்பவம்
x

சிறுவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லேண்ட்ஸ் மாகாணம் வார்விக்‌ஷெரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மே மாதம் அப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த அந்த சிறுமியை 2 சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் (வயது 17), நைசல் (வயது 17) ஆகிய 2 சிறுவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை வார்விக்‌ஷெரி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் ஜஹன்பெசுக்கு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனையும், மற்றொரு சிறுவன் நைசலுக்கு 9ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறுவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story