அயர்லாந்தில் இந்திய மாணவர்கள் இருவர் சாலை விபத்தில் பலி


அயர்லாந்தில் இந்திய மாணவர்கள் இருவர் சாலை விபத்தில் பலி
x

2 இந்திய மாணவர்கள் விபத்தில் இறந்ததற்கு தலைநகர் டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

டப்ளின்,

அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்லோ நகரில் வசித்து வந்தவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி, பார்க்லகவ் சிந்தூரி. இந்தியாவை சேர்ந்த இருவரும் அயர்லாந்தில் உள்ள ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். தனது நண்பர்கள் 2 பேருடன் இவர்கள் கார்லோ நகரில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தனர்.சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆடி காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒருவர் அங்குள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.


Next Story