மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து இந்தியர்கள் 3 பேர் பலி; 5 பேர் மாயம்

மொசாம்பிக்கில் படகு விபத்தில் சிக்கிய இந்தியர்களில் 5 பேர் மீட்கப்பட்டனர்.
மொசாம்பிக்கில் படகு கவிழ்ந்து இந்தியர்கள் 3 பேர் பலி; 5 பேர் மாயம்
Published on

மபுதோ,

மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியில் பெய்ரா துறைமுக பகுதியில் படகு ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில், இருந்த ஊழியர்கள் வேறு ஒரு படகுக்கு சென்று கொண்டு இருந்தனர். அதில், 14 இந்தியர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

அப்போது, அது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 5 பேரை காணவில்லை. அவர்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.

எனினும், விபத்தில் சிக்கிய இந்தியர்களில் 5 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு பெய்ரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நிலைமையை நாங்கள் உற்று கவனித்து வருகிறோம் என இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com