நைஜீரியாவில் 5 ஆயிரம் அரியவகை எறும்புகள் கடத்தல் - 2 சிறுவர்கள் கைது


நைஜீரியாவில் 5 ஆயிரம் அரியவகை எறும்புகள் கடத்தல் - 2 சிறுவர்கள் கைது
x

சோதனை குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் அரியவகை எறும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நைரோபி,

நைஜீரியா நாட்டில் உள்ள காடுகளில் பல்வேறு விதமான அரிய வகை பறவைகள், பூச்சி இனங்கள், மிருகங்கள் உள்ளன. இந்த நிலையில் வனப்பகுதியில் வாழும் அரிய வகை பூச்சியினங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் நைரோபியில் வெளிநாட்டினர் தங்கும் வணிக விடுதிகளில் போலீசாருடன் இணைந்து வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஓட்டல் அறையில் 'டெஸ்ட் டியூப்'களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எறும்புகளை கைப்பற்றினர்.

இவ்வாறு சோதனை குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் அரியவகை எறும்புகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story