நைஜீரியாவில் கனமழை, வெள்ளம்: 88 பேர் பலி


நைஜீரியாவில் கனமழை, வெள்ளம்: 88 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2025 7:39 PM IST (Updated: 30 May 2025 9:12 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் நைஜர் மாகாணம் மக்வா நகரில் நேற்று கனமழை பெய்தது. பல மணிநேரம் நீடித்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கு மக்வா நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த கனமழை, வெள்ளத்தில் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.

1 More update

Next Story