அமெரிக்கா: வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் மீது துப்பாக்கி சூடு

வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
வாஷிங்டன்,
வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் மீது துப்பாக்கி சூடுஅமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். பாதுகாப்பு பணியாளர்களைக் கண்டதும் அவர்களை தாக்க முற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இரு தரப்புக்குமிடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில் அந்த நபர் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்த நபர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தாக்க திட்டமிட்டு அங்கு சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






