பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான சர்வாதிகாரி ஆசிம் முனிர்: இம்ரான் கான் குற்றச்சாட்டு


பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான சர்வாதிகாரி ஆசிம் முனிர்: இம்ரான் கான் குற்றச்சாட்டு
x

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை அந்நாட்டு முன்னாள் பிரதமர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் கால் பதித்த இம்ரான் கான், தற்போது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், இம்ரான் கான் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

“பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான சர்வாதிகாரி ஆசிம் முனீர்தான். மனதளவிலும் நிலையற்றவராக அவர் உள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவில் கொடுங்கோன்மையுடன் நடந்து கொள்கிறார். அதிகார பசியால் பாதிக்கப்பட்ட முனீர், அதிகாரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்,” என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story