ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு
Published on

பீஜிங்,

சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 2 ஆயிரம் வீடுகள் கொண்ட இந்த குடியிருப்ப புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியது.

இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. அவர்கள் அங்கு சென்றதும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த 700-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றினர். இந்த தீ விபத்தில் 13 பேர் பலியானதாக தகவல் வெளியானது. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது. 76 பேர் படுகாயம் அடைந்திருப்பதுடன் மற்றும் 279 பேர் மாயமாகி இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த தீ விபத்தில் பலியானோருக்கு அதிபர் ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இன்று காலை அடுக்குமாடி குடியிருப்புகளை சரிபார்க்கும் பணியை முடிப்போம் என்று நம்புவதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்

காரணம் என்ன?

இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம் ஜன்னல்களை பாலியூரிதீன் நுரை பயன்படுத்தி காற்றோட்டத்தை தடை செய்ததால் தீ வேகமாக பரவியது தெரிய வந்துள்ளது. எனவே இதற்கு பொறுப்பான கட்டுமான நிறுவன அதிகாரிகள் 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com