ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு


ஆஸ்திரேலியா: கடலில் குளித்த இளம்பெண் சுறா தாக்கி உயிரிழப்பு
x

கடற்கரை உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கான்பெரா,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் கைலீஸ் நகரம் நீண்ட, அழகிய கடற்கரையை கொண்டு உள்ளது. எனவே உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது வழக்கம். அந்தவகையில் 20 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அங்கு சென்றிருந்தார்.

பின்னர் இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சுறா அவர்களை தாக்கியது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வாலிபர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த கடற்கரை உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

1 More update

Next Story