வங்காள தேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை


வங்காள தேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை
x

வங்கதேசத்தில் நடக்கும் மோதல் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு ராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியுள்ளார்.

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அங்கு முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியில் உள்ளது. வங்காளதேசத்தில் தொடர்ச்சியாக போராட்டங்களும் மோதல்களும் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக் அவர் கூறியதாவது: அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி இருப்பதால், இளைய அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை அச்சத்தில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், ஆயுதப்படைகளுக்கு கடமை அதிகரித்து உள்ளது. உடனடியாக மக்கள் ஒற்றுமையுடனும், நிறுவனங்கள் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும்.

மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ச்சியாக உங்களுக்கு உள்ளே சண்டையிட்டு கொண்டு இருந்தால், நாட்டின் சுதந்திரத்திற்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்றார்.

1 More update

Next Story