பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி


பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
x

தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

லண்டன்,

இங்கிலாந்தின் சால்போர்ட் நகரில் இருந்து மாடி பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். எக்லெஸ் நகரில் உள்ள ஒரு பாலத்தை அந்த பஸ் கடக்க முயன்றது. அப்போது பஸ்சின் மேல்பகுதி பாலத்தின் மீது உரசியது. இதில் அந்த பஸ்சில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து கவனக்குறைவாக ஓட்டிய பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



1 More update

Next Story