டிரம்புக்கு நோபல் பரிசு: கம்போடியா பிரதமர் ஆதரவு

பேரழிவு தரும் போர்களை டிரம்ப் தடுத்துள்ளார் என்று கம்போடியா பிரதமர் கூறியுள்ளார்.
புனோம் பென்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார். நார்வே நோபல் குழுவிற்கு கம்போடியா பிரதமர் ஹன் மானெட் கடிதம் எழுதியுள்ளார். அதில், "உலக அமைதியை நிலைநாட்டுவதில் டிரம்பின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
பல நாடுகள் இடையே ஏற்பட்ட மோதல்களுக்கு தீர்வு கண்டதுடன், பேரழிவு தரும் போர்களை டிரம்ப் தடுத்துள்ளார். கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் டிரம்ப் முக்கிய பங்காற்றினார் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனான போரை நிறுத்த டிரம்ப் உதவியதாக கூறும் பாகிஸ்தான், அதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று ஜூன் மாதம் பரிந்துரைத்தது. ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக நோபல் விருதுக்கு டிரம்ப்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த மாதம் பரிந்துரைத்தார். அந்த வரிசையில் இப்போது கம்போடியா பிரதமரும் இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.






