டிட்வா புயல்: இலங்கையில் உயிரிழப்பு 190 - ஐ தாண்டியது

டிட்வா புயலால் இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல்: இலங்கையில் உயிரிழப்பு 190 - ஐ தாண்டியது
Published on

கொழும்பு,

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவும் 'டிட்வா' புயலால் இலங்கையில், 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,

இலங்கையில் கடந்த வியாழக்கிழமை முதல் இன்றுவரை மழை, வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. 228 பேர் வெள்ளத்தில் மாயமாகி உள்ளனர். 1,094 முகாம்களில் 1.47 லட்சம் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ள இலங்கையுடன் மீட்புப்பணிகளில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையும் இந்திய விமானப்படையும் கைகோத்துள்ளது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இதனிடையே டிட்வா புயல் காரணமாக கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை சமாளிக்க இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com