சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறினால் தலா ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும்; டிரம்ப்


சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறினால் தலா  ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும்; டிரம்ப்
x
தினத்தந்தி 6 May 2025 1:06 AM IST (Updated: 6 May 2025 1:13 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதுமுதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு தாமாக வெளியேறினால் அவர்களுக்கு தலா ஆயிரம் டாலர்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை அமெரிக்காவை செய்துதரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story