நேபாளம்: பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பரிதாப பலி


நேபாளம்: பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பரிதாப பலி
x

நேபாளத்தில் 700 அடி பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காத்மாண்டு,

நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

காத்மாண்டுவிலிருந்து மேற்கே சுமார் 500 கி.மீ தொலைவில் உள்ள ருகும் மேற்கு மாவட்டத்தில் உள்ள பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து நிகழ்ந்தது. முசிகோட்டில் உள்ள கலங்காவிலிருந்து அத்பிஸ்கோட் நகராட்சியின் சியாலிகாடி பகுதியை நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில், அதிக வேகம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்திலேயே ஏழு பேர் இறந்ததாகவும், பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

1 More update

Next Story