நெதன்யாகு பயணம் தள்ளிவைப்பு; இந்தியாவின் பாதுகாப்பில் நம்பிக்கை உள்ளது - இஸ்ரேல்


பிரதமர் நெதன்யாகுவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக நெதன் யாகுவின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே அவர் ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பயணங்களும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது 3-வது முறையாக நெதன்யாகு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது இந்தியப் பயணத்தை ஒத்திவைத்ததாக. வெளியான தகவலை இஸ்ரேல் மறுத்து உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவுடனான இஸ்ரேலின் பிணைப்பு, பிரதமர் நெதன்யாகுவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது. பிரதமர் மோடியின் கீழ் இந்தியாவின் நெதன்யாகுவுக்கு பாதுகாப்பில் பிரதமர் முழு நம்பிக்கை உள்ளது. நெதன்யாகுவின் இந்திய புதிய பயணத்துக்கான தேதியை எங்கள் குழுக்கள் ஒருங்கிணைத்து வருகின்றன என்று தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story