ஈரான் துறைமுக வெடி விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு


ஈரான் துறைமுக வெடி விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 April 2025 8:54 AM IST (Updated: 27 April 2025 6:07 PM IST)
t-max-icont-min-icon

ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் பாந்தர் அப்பாஸ் நகரில் துறைமுகம் உள்ளது. இது ஈரானின் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. துறைமுகத்தில் கண்டெய்னர்கள் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது.

ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தகவல் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. அதன்படி இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 750 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story