டொமினிகன் குடியரசு நாட்டை மிரட்டும் ‘மெலிசா’புயல் - 11 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்

‘மெலிசா’ புயல் கரையை கடக்கும் சமயத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாண்டோ மொமிங்கோ,
வட அமெரிக்காவின் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினியன் குடியரசு நாட்டை ‘மெலிசா’ புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் டொமினிகன் குடியரசில் உள்ள 11 மாகாணங்களுக்கு அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, மீதம் உள்ள 11 மாகாணங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘மெலிசா’ புயல் கரையை கடக்கும் சமயத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் லூயிஸ் அபிநாடேர் அறிவுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story






