

மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபருக்கு கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றார். அவர் மெக்சிகோ சிட்டி நகரில் நடந்து குறைந்த அளவிலான பாதுகாவலர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அப்போது அவரை நெருங்கிய வாலிபர் ஒருவர் உடன் இணைந்து போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவருடைய தோள்பட்டை மேல் கையை போட்டதும் இன்றி சட்டென தகாத முறையில் தொட்டு முத்தமிட முயன்றார்.
சுதாரித்து கொண்ட கிளாடியா அந்த வாலிபரிடம் இருந்து உடனடியாக விலகினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மெக்சிகோவில் பெண் அதிபருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.