இந்தியா இன்னும் பல 2ம் நிலை தடைகளை பார்க்க போகிறது - டிரம்ப்


இந்தியா இன்னும் பல 2ம் நிலை தடைகளை பார்க்க போகிறது - டிரம்ப்
x

இந்தியாவை போல ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.பின்னர், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள கால அவகாசம் அளிக்கும்வகையில், கூடுதல் வரியை ஜூலை 9-ந்தேதிவரை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. பிறகு அந்த கால அவகாசம், ஆகஸ்டு 1-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

ஆகஸ்டு 1-ந்தேதி, 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பொருட்கள் மீது கூடுதல் வரி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். ஒவ்வொரு நாட்டுக்கும் எவ்வளவு வரிவிகிதம் என்பதை அவர் அறிவித்தார்.

அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 25 சதவீத வரி விதித்தார். அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.இந்தியா உள்ளிட்ட 68 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி, இன்று முதல் அமலுக்கு வந்தது.அதற்குள், இந்தியா மீதான வரிவிகிதத்தை மேலும் உயர்த்தப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதை அதற்கு காரணமாக தெரிவித்தார்.

இந்தநிலையில், இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீதும் வரி விதிக்கப்படலாம். இந்தியா மீது வரி விதித்து 8 மணி நேரம் தான்ஆகியுள்ளதுஇன்னும் பல 2ம் நிலை தடைகளை பார்க்க போகிறீர்கள் என பதில் அளித்தார்.மேலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து செமி கன்டக்டர் சிப்கள் மீதும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் அமெரிக்காவில் தயாரிக்க முற்பட்டால் செமி கன்டக்டர் சிப்கள் மீது வரி எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

1 More update

Next Story