ஏசி கம்ப்ரஸர் வெடித்து இந்தியர் மரணம்


ஏசி கம்ப்ரஸர் வெடித்து இந்தியர் மரணம்
x

ஏசி வெடித்ததில் படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரியாத்,

கேரள மாநிலம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஜியாத் (வயது 36). இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் 7 வருடங்களாக ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவரது அறையில் இருந்த ஏசி கம்ப்ரஸர் திடீரென வெடித்தது. இதனால் ஜியாத் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவர் ரியாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story