ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு கொலை வழக்கில் 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு


ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி நபருக்கு கொலை வழக்கில் 25 ஆண்டுகள் சிறை - கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2025 3:58 PM IST (Updated: 10 Dec 2025 4:00 PM IST)
t-max-icont-min-icon

தனது குடும்பத்தினரிடையும் எதையும் கூறிக்கொள்ளாமல், ராஜ்வீந்தர் சிங் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு தப்பியோடியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள வான்கெட்டி கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி, டோயா கார்டிங்லி(வயது 24) என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணயில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ்வீந்தர் சிங்(வயது 41) என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்த ராஜ்வீந்தர் சிங், ஆஸ்திரேலியாவில் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையில், கார்டிங்லி கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ராஜ்வீந்தர் சிங், தனது குடும்பத்தினரிடையும் எதையும் கூறிக்கொள்ளாமல், அவர் மட்டும் தனியாக ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து இந்தியாவில் பதுங்கியிருந்த ராஜ்வீந்தர் சிங்கை பிடிக்க ஆஸ்திரேலிய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்வீந்தர் சிங் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸ் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் ராஜ்வீந்தர் சிங் மீதான கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்வீந்தர் சிங் தனது குடும்பத்தினரை பற்றி சிறிதும் கவலைப்படாமல், தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் என்று குறிப்பிட்டார். இதையடுத்து இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் ராஜ்வீந்தர் சிங்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

1 More update

Next Story