வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருந்ததாக கணவரின் கழுத்தை அறுத்த ஆசிரியை - அதிர்ச்சி சம்பவம்


வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருந்ததாக கணவரின் கழுத்தை அறுத்த ஆசிரியை - அதிர்ச்சி சம்பவம்
x

சந்திரபிரபா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

வாஷிங்டன்,

இந்தியாவை சேர்ந்த தம்பதி அரவிந்த் - சந்திரபிரபா (வயது 44) . இந்த தம்பதி அமெரிக்காவின் வடகரோலினா மாகாணம் சார்லெட் நகரில் வசித்து வந்தனர். அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்திரபிரபா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வீட்டை சுத்தமாக வைப்பது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நிலவி வந்தது. அந்த வகையில் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பையாக வைத்திருப்பதாக கடந்த 12ம் தேதி கணவருடன் சந்திரபிரபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் கையில் வைத்திருந்த சமையல் கத்தியால் கணவன் அரவிந்தின் கழுத்தை சந்திரபிரபா அறுத்துள்ளார். இதில் கழுத்தில் படுகாயமடைந்த அரவிந்த் அலறி துடித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று அரவிந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கணவனை கத்தியால் கழுத்தை அறுத்த சந்திரபிரபாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபிரபா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

1 More update

Next Story