ஈரானால் அணு உலைகளை மீண்டும் கட்டமைக்க முடியாது; டொனால்டு டிரம்ப்


ஈரானால் அணு உலைகளை மீண்டும் கட்டமைக்க முடியாது; டொனால்டு டிரம்ப்
x

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.

வாஷிங்டன்,

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அதேவேளை, மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா 21ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. கடந்த 11 நாட்கள் நடந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சண்டை நிறுத்தத்திற்கு ஈரானும், இஸ்ரேலும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தாக்குதல் நடைபெற்ற அணு உலைகளை ஈரானால் மீண்டும் கட்டமைக்க முடியாது. அந்த பகுதிகள் பாறைகளுக்குள் உள்ளன. அனு உலைகள் இருந்த இடம் அழிக்கப்பட்டுவிட்டது. குண்டு வீச்சு விமானமான பி-2 விமானி யாரும் நினைத்துப்பார்க்கமுடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டார்' என்றார்.

1 More update

Next Story