இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சோமாலிலாந்து பயணம்


இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சோமாலிலாந்து பயணம்
x

சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அங்கீகரித்தது.

ஹர்கீசியா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாட்டில் கடந்த 1991ம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. இந்த போருக்குப்பின் சோமாலியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பகுதியை சோமாலிலாந்து என தனி நாடாக அறிவித்து அரசு நடைபெற்று வருகிறது. சோமாலிலாந்தை தனிநாடாக எந்த நாடும் அங்கீகரிக்காமல் இருந்தது. சோமாலிலாந்துக்கு தனியே அரசு, நாணயம் (currency) , பாஸ்போர்ட்டு போன்றவை உள்ளன.

இதனிடையே, சோமாலிலாந்தை கடந்த மாதம் 26ம் தேதி இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரித்தது. சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றுள்ளது. இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்கா போன்ற நாடுகள் சோமாலிலாந்தை விரைவில் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்த இஸ்ரேலுக்கு சோமாலியா, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிடியோன் சார் அரசுமுறை பயணமாக சோமாலிலாந்து சென்றுள்ளார். தலைநகர் ஹர்கீசியா சென்ற கிடியோனை சோமாலிலாந்து அதிகாரிகள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிடியோன் சோமாலிலாந்து அதிபர் அப்திரகுமான் முகமது அப்துல்லாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது

1 More update

Next Story