

கோலாலம்பூர்,
மியான்மரின் புதிடாங் நகரில் இருந்து கடல் வழியாக ஒரு படகு புறப்பட்டது. தாய்லாந்து-மலேசியா எல்லை அருகே உள்ள லங்காவி பகுதியில் சென்றபோது பாரம் தாங்காமல் அந்த படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து மலேசிய கடலோர போலீசார் அங்கு விரைந்ததும் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது.
இந்த மீட்பு பணியில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசிய கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது. இறந்த ஒருவரின் உடல் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.