மொராக்கோ: அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து 22 பேர் பலி


மொராக்கோ: அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து 22 பேர் பலி
x

கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரபாத்,

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் இரண்டாவது பெரிய நகரம் பெஸ். மிகப்பழமையான நகரான அங்கு 2 அடுக்குமாடி குடியிருப்புகள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன. இதில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது.

இதனையடுத்து அங்கு நடைபெற்ற மீட்பு பணியில் 22 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 16 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story