இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டில் உலக வர்த்தக மன்றத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது.
டாவோஸ்,
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக வர்த்தக மன்றத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அதிக வரி விதித்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் உலக வர்த்தக மன்ற கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர் உருலா வென் டர் லியன் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய அவர், டாவோஸ் வர்த்தக மன்ற கூட்டத்திற்குப்பின் அடுத்த வாரம் நான் இந்தியா செல்ல உள்ளேன். இந்தியாவுடன் விரைவில் வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். சிலர் இந்த வர்த்த ஒப்பந்தத்தை அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என்று கூறுகின்றனர். இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் அது உலகின் மொத்த ஜிடிபி-யில் கால் சதவீதம் ஆகும்’ என்றார்.






