2026 புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து

ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
வெலிங்டன்,
2025-ம் ஆண்டின் கடைசி நாளுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்தில் 2026 புத்தாண்டு பிறந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட நகரங்களில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நியூசிலாந்தை தொடர்ந்து சமோவா, டோங்கா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.






