பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி


பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
x

பிரதமர் செபாஸ்டியன் மீது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாரீஸ்,

பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை குறைக்கும் யோசனையை பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு முன்வைத்தார். இது நாடு முழுவதும் எதிர்ப்புகளை கிளப்பியது. எனவே அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதன்பிறகு புதிய பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக நியமித்து அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உத்தரவிட்டார். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு எதிராக 271 பேர் வாக்களித்தனர். ஆனால் பெரும்பான்மை பெற 289 வாக்குகளை பெற வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் அவரது பதவி தப்பியது. எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

1 More update

Next Story