அமைதிக்கான நோபல் பரிசு விவகாரம்: டிரம்ப் குறித்து புதின் கூறியது என்ன?


அமைதிக்கான நோபல் பரிசு விவகாரம்: டிரம்ப் குறித்து புதின் கூறியது என்ன?
x
தினத்தந்தி 10 Oct 2025 11:49 PM IST (Updated: 10 Oct 2025 11:49 PM IST)
t-max-icont-min-icon

டிரம்பின் அமைதி முயற்சிகளுக்கு புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் எதிர்க்கட்சித்தலைவர் மரியா மச்சாடோ வென்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், நோபல் பரிசு தேர்வில் டிரம்ப் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? என ரஷிய அதிபர் புதினிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் நான் முடிவு எடுக்க முடியாது. ஆனால் பல ஆண்டுகளாக ஏன் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உண்மையிலேயே அவர் (டிரம்ப்) நிறைய செய்துள்ளார். காசா போர் நிறுத்தம் அமலில் வந்தால், அது வரலாற்றுப்பூர்வ சாதனையாக இருக்கும்’ என்று கூறினார்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா மச்சாடோ குறித்து எதுவும் கூறாத புதின், அமைதிக்காக எதுவும் செய்யாத நபர்களுக்கும் கடந்த காலங்களில் நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

1 More update

Next Story