சீனாவில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சென் நிங் யாங் மரணம்


சீனாவில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சென் நிங் யாங் மரணம்
x
தினத்தந்தி 20 Oct 2025 3:30 AM IST (Updated: 20 Oct 2025 3:30 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை துகள்கள் தொடர்பான சமநிலை விதிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 1957-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.

பீஜிங்,

சீனாவைச் சேர்ந்தவர் இயற்பியல் பேராசிரியர் சென் நிங் யாங். 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியலாளர்களில் இவரும் ஒருவர். அடிப்படை துகள்கள் தொடர்பான சமநிலை விதிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக 1957-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.

இதன்மூலம் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் சீனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக மாறினார். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தலைநகர் பீஜிங்கில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 103.

1 More update

Next Story