பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு
Published on

திம்பு,

2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு தலைநகர் திம்புவில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார்.

இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பூடன் பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,

பூடான் நாட்டில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். பூடான் மன்னர் உடன் உறவை வலுப்படுத்துவது குறித்து நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இந்தப் பயணம் நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com