ஜெர்மனி முன்னாள் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு


ஜெர்மனி முன்னாள் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு
x

6 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி ஜெர்மனி சென்றுள்ளார்.

பெர்லின்,

6 நாட்கள் பயணமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜெர்மனி சென்றுள்ளார். அவர் கடந்த 15ம் தேதி டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.

ஜெர்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். பெர்லினின் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், ஜெர்மனி முன்னாள் பிரதமர் ஒலாப் ஸ்கால்சை ராகுல் காந்தி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அரசியல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஒலாப் ஸ்கால்ஸ் மதிய விருந்து அளித்தார்

1 More update

Next Story