வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x

கலிதா ஜியா நேற்று பலனின்றி உயிரிழந்தார்.

டாக்கா,

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமானவர் கலிதா ஜியா (வயது 80). இவர் இதயம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினை காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, கலிதா ஜியா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை கலீதா ஜியாவின் மறையை தொடர்ந்து வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலிதா ஜியாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் ஷெர் இ பெங்கால் நகர் பகுதியில் முன்னாள் அதிபரும், கலிதா ஜியாவின் கணவருமான ஜியாவு ரகுமான் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகே கலிதா ஜியாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

1 More update

Next Story