ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம் - மழை வேண்டி தலைநகரில் சிறப்பு தொழுகை

பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
ஈரானில் கடும் தண்ணீர் பஞ்சம் - மழை வேண்டி தலைநகரில் சிறப்பு தொழுகை
Published on

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சி நிலவி வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர் இருப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் ஈரானில் தற்போது வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழை வேண்டி ஈரான் மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பிரசித்தி பெற்ற சலே மசூதியில் நடைபெற்ற இந்த தொழுகையில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

சுமார் 1 கோடி பேர் வாழும் தெஹ்ரானில் தண்ணீர் பற்றாக்குறை தொடந்து நீடித்தால் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக தெஹ்ரான் மாறிவிடும் என அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், வரும் டிசம்பருக்குள் மழை பெய்யவில்லை என்றால் பொதுமக்கள் தண்ணீர் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com