ஒரு தலைபட்சமானது.. மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு தலைபட்சமானது.. மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து
Published on

டாக்கா, 

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களில் ஷேக் ஹசீனா குற்றவாளி என வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. தனது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சொந்த நாட்டு மக்களையே ஷேக் ஹசீனா கொல்ல உத்தரவிட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதைப்பற்றியும் கவலைப்படபோவது இல்லை. தனக்கு எதிராக அரசியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வழக்கு இது. ஒரு தலைபட்சமானது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com