தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது

தென்கொரியாவில் கடந்த ஆண்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது
தென்கொரிய முன்னாள் பிரதமர் கைது
Published on

சியோல்,

தென்கொரிய அதிபராக செயல்பட்டவர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனபடுத்தினார். ஊழல் குற்றச்சாட்டில் விசாரணையை எதிர்கொண்டு வந்த யூன் சுக் இயோல் அதில் இருந்து தப்பிக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. பின்னர், அவசர நிலை பிரகடனம் திரும்பப்பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார். புதிய அரசு பதவியேற்றுள்ளது. அதேவேளை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தொடர்பாக யூன் சுக் இயோலை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென்கொரிய முன்னாள் பிரதமர் வாங்க் ஹொ யன் மற்றும் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஷொ டெய் யங் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அதற்கு ஆதரவாக செயல்பட்டதாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com