காசா போர் நிறுத்த ஒப்பந்தம் பணயக்கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது - இங்கிலாந்து பிரதமர்

பணயக்கைதிகள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
லண்டன்,
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டது ஆழ்ந்த நிம்மதி அளிக்கிறது. இஸ்ரேல் என்ஜினீயர் ஏவிநேடன், ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டது நினைவில் நிற்கிறது. அவரது குடும்பத்தை சந்தித்தேன். 2 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. என் சிந்தனைகள் அவர்களுடனே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






