சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை - தைவான் அரசு அறிவிப்பு


சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை - தைவான் அரசு அறிவிப்பு
x

சீன பல்கலைக்கழகங்களுக்கு தைவான் அரசு தடை விதித்துள்ளது.

தைபே நகரம்,

1949-ல் தனிநாடாக பிரிந்து சென்ற தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டுகின்றது. தைவான் எல்லை பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது.

இந்தநிலையில் சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பெய்ஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் மற்றும் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட7 பல்கலைக்கழகங்களுக்கு தைவான் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக்கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story