அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை - ஜப்பான் திட்டவட்டம்


அணு ஆயுதங்கள் வைத்திருக்க மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை - ஜப்பான் திட்டவட்டம்
x

மூத்த பாதுகாப்பு அதிகாரியின் பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி அணு ஆயுதங்களை வாங்க ஜப்பான் அரசு முன்வர வேண்டும் என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஏற்க ஜப்பான் பிரதமர் சனா தகைச்சி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டோம் என கடந்த பல தசாப்தங்களாக ஜப்பான் அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானை பொறுத்தவரை சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.

அதே சமயம், அமெரிக்காவுடன் ஜப்பான் நல்லுறவை பேணி வருகிறது. இந்நிலையில், அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அல்லது அண்டை நாடுகளிடம் இருந்து தீர்க்க முடியாத பிரச்சினை வந்தாலோ மட்டுமே அணு ஆயுத பயன்பாடு தொடர்பான பேச்சு தொடங்கப்படும் என்ற கொள்கையில் ஜப்பான் உறுதியாக உள்ளது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story