இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது - பியூஷ் கோயல்


இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது - பியூஷ் கோயல்
x

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

அபுதாபி,

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் அபுதாபி சென்றுள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச், கடந்த 16-ந் தேதி டெல்லியில் இருந்தார். இந்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக செல்கிறது. சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக உரசல் எதுவும் இல்லை. அமெரிக்கா எங்களது நம்பகமான கூட்டாளி.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story