இந்த வார விசேஷங்கள்: 9-7-2024 முதல் 15-7-2024 வரை


Aanmigam, This weeks events
x
தினத்தந்தி 9 July 2024 10:13 AM IST (Updated: 9 July 2024 1:29 PM IST)
t-max-icont-min-icon

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நாளை நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.

9-ந்தேதி (செவ்வாய்)

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் உலா.

* குரங்கணி முத்துமாரியம்மன் பவனி.

* ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழா- தங்க கைலாய பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலா.

* கீழ்நோக்கு நாள்.

10-ந்தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனத்தில் பவனி,

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

* திருத்தணி முருகன் பால் அபிஷேகம்.

11-ந்தேதி (வியாழன்)

* சிதம்பரம் நடராஜர் ரத உற்சவம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

* ராமநாதபுரம் கோதண்ட ராமர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் உலா.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (வெள்ளி)

* ஆனி திருமஞ்சனம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* மேல்நோக்கு நாள்.

13-ந்தேதி (சனி)

* மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி குதிரை வாகனத்தில் உலா,

* சமநோக்கு நாள்.

14-ந்தேதி (ஞாயிறு)

* வடமதுரை சவுந்திரராஜர் அன்ன வாகனத்தில் பவனி.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் உலா.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்சப வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

15-ந்தேதி (திங்கள்)

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் வருசாபிஷேகம்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராம அவதாரம், அனுமன் வாகனத்தில் உலா.

* வீரவநல்லூர் பூமிநாத சுவாமி தெப்பம்.

* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சப்தா வர்ணம்.

* சமநோக்கு நாள்.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi


Next Story